கொரோனா பரவலால் தடைப்பட்டிருந்த 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் 19ம் திகதி தொடங்கவுள்ளது.
அனைவரது பாதுகாப்பது கருதி கிரிக்கெட் வாரியம் பல்வேறு நடைமுறைகளும் வழிகாட்டுதலும் ஐ.பி.எல். வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் செல்ல வேண்டும் என்று வழியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த பாதுகாப்பான சூழலை விட்டு யாராவது விலகினால் அவர்கள் மீது ஐ.பி.எல். நடத்தை விதிமுறைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஐ.பி.எல். வீரர்களுக்கு என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.