உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால் கூட அதனை ஆரோக்கியமான முறையில் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.
ஒருவர் உயிர் வாழ உணவில்லாமல் கூட இருந்துவிடலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ்வதென்பது என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
ஏனெனில் உடலுக்கு நீர்ச்சத்தானது மிக மிக அவசியமான ஒன்றாகும். எனவே அத்தகைய நீர்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால், நிச்சயம் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் மற்றும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, உடல் எடையில் நல்ல மாற்றம் பெறலாம்.
அதுமட்டுமல்லாமல் வாட்டர் டயட்டை தொடர்ந்து செய்தால் உடல் எடையில் நல்ல மாற்றம் ஏற்படும்.
வாட்டர் டயட் எப்படி தினமும் ஃபாலோ பண்ணணும் என்பதைப் பற்றி பார்ப்போம்
- வாட்டர் டயட்டின் முதல் நாள் வெறும் தண்ணீர் மட்டும் பருகி வர வேண்டும். அதிலும் நாள் முழுவதும் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்கணும்.
- இரண்டாம் நாள் க்ரீன் டீயை குடிக்க வேண்டும். அத்துடன் இதனால் உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறி விடும்.
- மூன்றாம் நாள் ஐஸ் தண்ணீரைப் பருகி வர வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள மெட்டபாலிசமானது அதிகரித்து விடும்.
- நான்காம் நாள் 5 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். அதுவும் அந்த நீரில் 2 டேபிள் ஸ்பூன் வெல்லத்தைச் சேர்த்து கலந்து குடிக்கணும். இதனால் உடலின் எனர்ஜியானது அதிகரிக்கும்.
- ஐந்தாம் நாளில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்களை உடலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஐந்தாம் நாளன்று நான்கு முறை ஒரு கப் உங்களுக்கு பிடித்த சூப்பை குடிக்க வேண்டும். அது அசைவ சூப்பாக இருக்க வேண்டும்.
- ஆறாம் நாள் வெறும் பழங்களால் செய்யப்பட்ட பிரஷ் ஜூஸ்களை குடிக்க வேண்டும்.
- எடையை குறைப்பதில் எலுமிச்சை ஜூஸ் மிகவும் சிறந்த பானம். எனவே அத்தகைய எலுமிச்சை ஜூஸை தேன் மற்றும் 1 சிட்டிகை பட்டைத் தூள் சேர்த்து குடிக்க வேண்டும்.
- தண்ணீருடன் பழங்களை கூட சாப்பிடலாம். இப்படி கடைப்பிடித்து வந்தால் மிக விரைவில் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை நீங்கள் காணலாம்.