பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மாபெரும் வெற்றியை தந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜக்க்ஷ தனது டுவிட்டர் தளத்தில் தமிழ் மொழியில் பதிவு செய்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் என்னால் முன்வைக்கப்பட்ட “சுபீட்சத்தின் நோக்கு” எனும் கொள்கையை மீண்டும் ஒரு முறை உங்கள் சக்தியின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளீர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் என்னால் முன்வைக்கப்பட்ட "சுபீட்சத்தின் நோக்கு " கொள்கையை மீண்டும் ஒரு முறை மக்கள் சக்தியின் மூலம் உறுதிப்படுத்த இந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விற்கு மாபெரும் வெற்றியை தந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். @PodujanaParty pic.twitter.com/caMAhj8Ynn
— Gotabaya Rajapaksa (@GotabayaR) August 7, 2020