கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த விமானி தீபக் வசந்த் சாதே, இந்திய விமானப் படையின் முன்னாள் பைலட்டாக இருந்து, திறம்பட செயலாற்றியவர் என தகவல் வெளியாகியுள்ளது.
கேப்டன் தீபக் வசந்த் சாதே, இந்திய விமானப்படையின் விங் கமாண்டராக கடந்த 1981-முதல் 22 ஆண்டுகள் பணியாற்றி கடந்த 2003-ல் ஓய்வு பெற்றுள்ளார். இதனைதொடர்ந்து வணிக விமானங்களுக்கு சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த அவர், இந்திய விமானப்படை அகடாமியில் 58வது ரேங்க் பெற்ற தீபக் வசந்த் சாதேவிற்கு வீரவாள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
போயிங் 737 விமானத்தை இயக்குவதில் மிகுந்த திறமை பெற்றவராக விளங்கியதால் அவர், இந்திய விமானப்படையில் சோதனை பைலட்ஆக பணியாற்றி வந்துள்ளார். மும்பையில் போவாய் என்ற இடத்தில் வசித்து வந்த இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.




















