இந்தியாவில் தனது 3வது மாடலான Sonet காரை Kia நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
Seltos என்ற subcompact crossover SUV மாடலுடன் இந்தியாவில் களமிறங்கிய வெகு விரைவிலேயே முத்திரை பதித்திருந்த கியா நிறுவனம் அடுத்ததாக Carnival என்ற MPV மாடலை களமிறக்கியது. தற்போது அந்த வெற்றி வரிசையில் 3வதாக sub-compact SUV வகையில் Sonet மாடலை களமிறக்கியுள்ளது. இது 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட கியாவின் முதல் காராகும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ கண்காட்சியில் Sonet கான்செப்ட் கார் பார்வையாளர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது அதன் தயாரிப்பு மாடல் வெளிவந்துள்ளது.
அட்டகாசமான ஸ்டைல், திடகாத்திரமான கட்டமைப்பு, பெர்ஃபார்மன்ஸ் என்ற கலவையாக வெளிவந்திருக்கிறது Kia Sonet.
‘tiger-nose’ அமைப்பிலான கிரில் வடிவமைப்பு காரின் முகப்புக்கு பொலிவை தருகிறது. LED DRLs, LED tail lights, 16-inch dual-tone alloy wheels என வெளிப்புறத்தில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் அனைத்தும் இந்தக்காரை பிரீமியம் எஸ்யூவியாக அடையாளப்படுத்துகிறது.
காரின் இண்டீரியரை பொறுத்தவரையில் வெளிப்புற டிசைன் அம்சங்கள் உட்புறத்திற்கும் கடத்தப்பட்டிருக்கின்றன. இதில் ஏராளமான Segment – First அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
* leather-wrapped three-spoke steering wheel
* அனலாக் டாக்கோமீட்டருடன் கூடிய 4.25 இஞ்ச் டிஜிட்டல் டிஸ்பிளே
* 10.25-inch touchscreen infotainment system with Apple CarPlay and Android Auto
* in-built navigation,
* UVO connected technology
* wireless phone-charging
* LED lighting all-around
* Electric sunroof
* LED mood lighting
* BOSE 7-speaker system with subwoofer
* Smart-Air purifier
* Multi-drive modes
பாதுகாப்பு அம்சங்கள்:
* Six airbags
* Traction control
* ABS with EBD
* Tyre pressure monitoring system (TPMS)
* ESC, HAC, VSM and brake assist
* Projector fog lamps
* ISOFIX child seat-anchors
இஞ்சின்:
புத்தம்புதிய Sonet காரில் 3 இஞ்சின் ஆப்ஷன்களில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
* 1.2-litre petrol
* 1.0-litre T-GDi petrol
* 1.5-litre diesel engine
விலை:
இக்காரின் விலை பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் அளிக்கப்படவில்லை என்றாலும் வேரியண்ட் வாரியாக இக்கார் 8 லட்ச ரூபாய் முதல் 13 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
போட்டியாளர்கள்:
புதிய Sonet காரானது Hyundai Venue, Maruti Suzuki Vitara Brezza, Ford EcoSport, Tata Nexon, Mahindra XUV300 போன்ற மாடல்களுடன் போட்டி போட உள்ளது.




















