இங்கிலாந்தில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் பாடசாலைகள் திறக்கப்பட வேண்டுமென பிரதமர் போரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இங்கிலாந்தில் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.
மாணவர்களின் படிப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. இனியும் பாடசாலைகளை மூடுவது நல்லதல்ல.
பாடசாலைகளில் மாணவர்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பான விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இனி ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும் பாடசாலைகள் மூடல் என்பது கடைசி பட்சமாக இருக்கும்.
மாணவர்கள் தங்கள் கல்வியை தவறவிட்டால் நாடு பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும்.
எனவே கொரோனா பரவல் முற்றிலும் குறையாமல் இருந்தாலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பாடசாலைகளில் மாணவர்கள் தங்கள் படிப்பினை தொடர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.