ரஷ்யாவில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் 4 பேர் நதியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையை சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியை சேர்ந்த ராமு விக்னேஷ், மனோஜ் ஆனந்த் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் ரஷ்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்கலைக்கழங்களில் மருத்துவக்கல்வி பயின்று வருகின்றனர்.
இவ்வாறு பயின்றுவரும் தமிழக மாணவர்களில் 4 பேர் பாய்ந்தோடும் ஒல்கா நதியை பார்வையிட சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த மாணவர்கள் நால்வரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த தமிழக மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டுவர தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் முதலமைச்சர் பழனிச்சாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.