ஸ்ரீலங்காவில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2844 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் குணமடைந்துள்ள நிலையில், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.