தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளில் மூன்று முறை நியமிக்கப்பட்ட ஒரே பிரதமர் என்ற உலக சாதனையை மஹிந்த ராஜபக்க்ஷ படைத்துள்ளதாக பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அதன்படி பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
எவ்வாயினும் 2018 இல் மஹிந்த ராஜபக்க்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவரது ருவிட்டர் பதவினை விமர்சித்துள்ளனர்.
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கின்றது. நேற்றைய தினம் ரஜமஹா விகாரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் புதிய பிரதமருக்கு தமது சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில இந்த பதிவினை தனது உத்தியோக பூர்வ ருவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Being the the PM today, @PresRajapaksa set a world record. He was the only PM to be appointed thrice in three consecutive years, namely, 2018, 2019 & 2020.
එක ලඟ වසර තුනක, එනම් 2018, 2019 සහ 2020 දී තෙවරක් පත් වූ ලොව පලමු අගමැති ලෙස ජනපති මහින්ද රාජපක්ෂ ලෝක වාර්තාවක් තබයි.
— Udaya Gammanpila (@UPGammanpila) August 9, 2020