நியூசிலாந்தின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டர்ன் ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.
கொரோனா வைரஸை கட்டுப்பாடுகளுடன் எதிர்த்த ஜெசிந்தா ஆர்டனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கடந்த 100 நாட்களாக ஒருவருக்கு கூட அந்நாட்டில் தொற்று ஏற்படவில்லை, வல்லரசு நாடே திணறி வரும் நிலையில் ஜெசிந்தாவின் நடவடிக்கைகளை மக்களை வியப்பில் ஆழ்த்தின.
இந்நிலையில் அங்குள்ள ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று ஜெசிந்தா வழிபாடு நடத்தியுள்ளார்.
கோயிலுக்குள் நுழையும் காலணிகளை அகற்றிவிட்டு சென்ற ஜெசிந்தா, அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் பங்கேற்றார்.
தொடர்ந்து கோயில் சார்பாக நடந்த விருந்தில் கலந்து கொண்டு, இந்திய உணவான பூரி மசாலாவை ருசித்து சாப்பிட்டார்.
இதுதொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஜெசிந்தா வெளியிட இந்தியர்கள் மத்தியில் நல்வரவேற்பை பெற்றுள்ளது.
வருகிற செப்டம்பர் மாதம் நியூசிலாந்தில் பிரதமருக்கான தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/MukteshPardeshi/status/1291991068905369600



















