ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிபர் விளாடிமிர் புட்டின் சற்றுமுன் அறிவித்துள்ளார். உலகிலேயே முதன்முறையாக தடுப்பூசியை கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்டுபிடித்த புதிய தடுப்பூசி எனது மகள் உள்ளிட்டோருக்கும் செலுத்தி பரிசோதனை செய்துகொள்ள செய்துள்ளதாகவும் அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி பெறுவது தொடர்பாக ரஷியாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்ய திட்டமிடப்படுமா என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் சற்றுமுன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கொரோனா தடுப்பூசியை பெறுவது தொடர்பாக மத்திய அரசு அமைத்த தேசிய நிபுணர் குழு நாளை ஆலோசனை நடத்துவதாகவும்,
இதில் தடுப்பூசியின் விதிகள் உள்பட பல்வேறு நடைமுறைகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தேசிய நிபுணர் குழு மாநில அரசுகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் வைரஸ் தடுப்பூசி தொடர்பான தகவல்களில் தொடர்பில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.



















