ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சை தம் வசம் வைத்திருக்க எந்த தடையும் இல்லை என்று அரசியலமைப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு தனது கருத்துக்களை தெரிவித்த அரசியலமைப்பு வழக்கறிஞர் மனோகர டி சில்வா, பாதுகாப்பு உள்ளிட்ட மக்களின் நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதி பயன்படுத்த வேண்டும் என்று அரசியலமைப்பு தெளிவாகக் கூறுகிறது என்றார். ஜனாதிபதி அமைச்சரவையின் தலைவர் என்றும் அவர் கூறினார்.
எனவே, ஜனாதிபதியால் அந்த இலாகாவை வைத்திருக்க முடியாது என்று சொல்வது முட்டாள்தனமானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.