அமெரிக்காவில் இரண்டு வாரத்தில் மட்டும் 97 ஆயிரம் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் அமெரிக்காவில்தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. அங்கு மொத்த பாதிப்பு அரை கோடியை தாண்டிய நிலையிலும், பல்வேறு கட்டுப்பாடு தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
குறிப்பாக, இன்னும் ஒரு வாரத்தில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. பல மாகாணங்களில் பள்ளிகள் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக் கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாணவர்களுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 97,000 மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை அமெரிக்காவில் 3 லட்சத்து 38 ஆயிரம் மாணவர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 4ல் ஒரு பங்கு கடந்த 2 வாரத்தில் ஏற்பட்டுள்ளது. இதுவரை 25 குழந்தைகள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். எனவே, பள்ளிகள் திறப்பதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்தியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.