ஐ. தே. கட்சியின் ஆயுட் காலம் முடிந்து விட்டது என்றுதான் நான் நினைக்கிறேன் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐ. தே. கட்சியின் ஆயுட் காலம் முடிந்து விட்டது என்றுதான் நான் நினைக்கிறேன்.
சஜித் பிரேமதாசவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இப்போது வெறும் கட்டடமாகவே மாறியுள்ள ஸ்ரீகொத்தாவை பிரித்துக் கொள்ளும் தேவையே உள்ளது.
எனவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு இனி அரசியல் எதிர்காலம் என்று எதுவும் இல்லை.
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் மிகவும் மோசமான பின்னடைவைச் சந்தித்தது.
பல குழுக்கள் தேசிய மக்கள் சக்தியில் இணைந்து போட்டியிட்ட போதும், தேசிய மக்கள் சக்தி ஏற்கனவே பாராளுமன்றத்தில் கொண்டிருந்த ஆசனங்களில் அரைவாசியை இழந்திருக்கின்றது.
தேசிய மக்கள் சக்தி தனக்குக் கிடைத்த வாக்குகள் மூலம் இரண்டு ஆசனங்களையும், தேசியப் பட்டியலின் மூலம் ஒரு ஆசனத்தையும் மட்டுமே பெற்றுள்ளது.
இவ்வாறான ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறினார்.