பிரித்தானியாவின் தனிமைப்படுத்தும் பட்டியலில் பிரான்ஸ் சேர்க்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சனிக்கிழமை 04:00 மணிக்குப் பிறகு பிரான்ஸ், நெதர்லாந்து, மொனாக்கோ, மால்டா, டர்க்ஸ்-கைகோஸ் மற்றும் அருபா ஆகிய நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு வரும் அனைவரும் 14 நாள் சுயமாக தனிமைப்படுத்த வேண்டும் என பிரித்தானியா அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பிரான்சில் இருந்து வருகை தரும் அனைவருக்கும் 14 நாள் தனிமைப்படுத்தல் விதிக்க பிரித்தானியா எடுத்த முடிவால் நாங்கள் வருந்துகிறோம், இது ஒரு பரஸ்பர நடவடிக்கைக்கு வழிவகுக்கும்” என ஐரோப்பிய விவகாரங்களுக்கான பிரான்ஸ் ஜூனியர் அமைச்சர் கிளெமென்ட் பியூன் எச்சரித்துள்ளார்.
பிரான்ஸ் சீக்கிரம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று நம்புகிறோம் என்று பியூன் ட்விட்டரில் தெரிவித்தார்.
வியாழக்கிழமை, பிரான்சில் 2,669 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது மே மாதத்திலிருந்து அதன் அதிகபட்ச தினசரி எண்ணிக்கையாகும்.