குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில், ரயில்வே துறையில் வேலை பார்த்து வந்த 32 வயது வாலிபர். 2016 இல் திருமணம் செய்து முறைப்படி விவாகரத்து பெற்று விட்டார். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு கீதா என்ற பெண்ணை அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். இது கீதாவுக்கு மூன்றாவது திருமணம்.
இருவருக்கும் இருவருடைய கடந்த கால வாழ்க்கை குறித்து தெரிந்து தான் இருந்தது. திருமணத்திற்கு பிறகு மாமியார் மருமகளுக்கு இடையில் சண்டை வந்துள்ளது. இதனை கணவர் தட்டி கேட்காமல் இருந்ததால், எனக்கு சாதகமாக உங்கள் அம்மாவிடம் ஏன் பேசவில்லை என்று கூறி சண்டை போட்டு இருக்கின்றார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட தாம்பத்திய உறவு வேண்டாம் என்று கீதா சபதம் எடுத்துள்ளார். இரவு தூங்கச் செல்லும் பொழுது கணவருடன் உறங்காமல் தனியாக படுக்கைக்கு சென்று உள்ளார். மனைவியை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார், ஆனால் முடியவில்லை. ஒருக்கட்டதில் கீதா தாய்வீட்டிற்கு செல்கின்றார்.
இதனால் மனமுடைந்த கணவர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பு செய்தி கேட்டு கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற கீதா வந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் வரக்கூடாது என்று மாமியார் உட்பட பலரும் தடுத்ததில் இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. கணவனை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.