சென்னையில் உள்ள அம்பத்தூர் ஒரகடம் காஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 24). இவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டதாரியாக இருந்து வருகிறார். தற்போது தனியார் கம்பெனியில் பணியாற்றி வரும் நிலையில், இவரும் அதே பகுதியை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே, இருவரையும் அழைத்து கண்டித்துள்ளனர். இதன் பிறகு மகாதேவனை சந்திப்பதை மாணவி நிறுத்தியுள்ளார்.
இதனையடுத்து மீண்டும் பேசும்படி மகாதேவன் மாணவியை வற்புறுத்தியுள்ளார். இதற்கு பெண்மணி மறுப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த கொடூரன் மாணவியின் பெயரில் போலியான முகநூல் கணக்கை ஒன்றை துவங்கியுள்ளான்.
அதில், காதலித்த நேரத்தில் எடுத்த புகைப்படங்களை ஆபாசமாக பதிவேற்றி, அவரது அலைபேசி எண்ணையும் குறிப்பிட்டுள்ளான். இதனால் மாணவிக்கு பல்வேறு நபர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அம்பத்தூர் காவல் நிலைத்தில், இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து மகாதேவனை சிறையில் அடைத்தனர்.