2020ஆம் ஆண்டு இறுதி வரையில் H-1B மற்றும் H-4 விசாக்கள் வழங்குவதை தடை செய்வதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். தற்போது இந்த அறிவிப்பில் திடீரெனெ தளர்வுகளை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
H-1B மற்றும் H-4 விசாக்கள் வழங்குவதை டிரம்ப் நிறுத்தியதால் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மத்தியில் அவருக்கு கடும் எதிர்ப்புக்குரல் எழுந்தது. இதற்காக மத்திய அரசும் தனது கவலையை அமெரிக்காவிடம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், H-1B மற்றும் H-4 விசாக்களுக்கான தடை தேர்தலில் தனது வெற்றியை பாதிக்கும் என்பதால் டிரம்ப் மீண்டும் H1B விசாவில் தளர்வுகளை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ட்ரம்ப் அறிவித்துள்ள இந்த தளர்வு காரணமாக அமெரிக்காவில் வேலை பார்த்துவிட்டு தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பியவர்கள் மீண்டும் அதே வேலைக்கு திரும்ப விரும்பினால் அவர்களுக்கு H-1B விசா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அமெரிக்கா வரும் ஊழியர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் H -4 விசா வழங்கப்படும் என அந்த நாட்டு
அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க பொருளாதாரத்தை மீட்கவே இந்த தளர்வுகள் என டிரம்ப் விளக்கமளித்திருந்தார், ஆனால் தேர்தலை கருத்தில் கொண்டே டிரம்ப் இந்த தளர்வை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.