தமிழகத்தில் குழந்தைகளை கொன்று விட்டு, மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசியில் இருக்கும் செங்கமலப்பட்டியை சேர்ந்தவர் காளிராஜ். இவர் அருகில் இருக்கும் திருத்தங்கல் அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடை அய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு தங்கப்புஷ்பம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மாரீஸ்வரன், காயத்ரி என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இருப்பினும் காளிராஜ் பெண்கள் மீது அதிக ஆசை கொண்டவர் என்பதால், மனைவியை விட்டு வேறோரு பெண்ணிடம் நெருக்கமாக இருந்துள்ளார்.
அதாவது, வெளியூர் சென்ற போது அந்த பாலியல் தொழிலாளி பெண்ணிடம் நெருக்கமாக இருந்துள்ளார்.
அதன் பின் ஊர் திரும்பிய காளிராஜுக்கு, அந்த பெண்ணிடம் நெருக்கமாக இருந்ததால், எங்கு பால்வினை நோய் நமக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில், மனைவியுடனான தாம்பத்தியத்தில் பீதியடைந்துள்ளார்.
இதனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, சிவகாசி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில், குடும்பத்தோடு சென்று மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார். அவர் நினைத்ததுபோல், முதல்கட்ட பால்வினை நோயோ, எய்ட்ஸ் தொற்றோ, எதுவும் யாருக்கும் இல்லை என்று முடிவுகள் வந்தன.
ஆனாலும், எச்.ஐ.வி. தொற்று பல ஆண்டுகளுக்கு வெளியே தெரியாமல் இருந்து, பின்னரே தெரியவரும் என்று எப்போதோ படித்தது, அவருக்கு இப்போது ஞாபகம் வந்துள்ளது.
அதுமட்டுமின்றி தன்னுடைய ஆண்ட்ராய்டு செல்போனை வைத்து கூகுளில் இது குறித்து விடை தேட அவருக்கு பல சந்தேகங்கள் வலுத்துள்ளது.
ஏனென்றால், பால் வினை நோய் மற்றும் எச்.ஐ.வி. தொற்றுக்கான அறிகுறிகள் என கூகுள் தேடலில் குறிப்பிடப்பட்டிருந்தவை, தனக்கும் இருப்பதாகக் கருதினார்.
இதை மறக்கவோ, மறைக்கவோ முடியாது எனத் தொடர்ந்து அது குறித்தே சிந்தித்துள்ளார். இதனால் இந்த நோயை வைத்துக்கொண்டு இனி உயிர் வாழ முடியாது குடும்பத்தோடு தற்கொலை செய்து உயிரை விடுவோம். என்று மனைவியிடம் கூற, வீட்டில் ஓயாத சண்டை ஆனது.




















