தமிழகத்தில் கணவனை கொலை செய்துவிட்டு, அவருடைய இன்சூரன்ஸ் பணத்தை வைத்து காதலனுடன் வாழ நினைத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். 39 வயதான இவர் வீடியோ கிராபராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு காயத்ரி என்ற 31 வயதில் மனைவியும், நான்கு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. ஆறு ஆண்டுகளுக்கும் முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், மதுரையைச் சேர்ந்த யாசர் என்பவர் நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதியில் ஜெராக்ஸ் மற்றும் மொபைல் கடை வைத்திருக்கிறார். அவருக்கும் காயத்ரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன் பின் இது நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியுள்ளது. இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு யாசர் பிளே ஸ்கூல் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.
இதற்காக கணவர் பெயரில் இருந்த வீட்டு பத்திரத்தை காயத்ரி அடகு வைத்து 10 லட்சம் ரூபாய் பணம் பெற்று அதை யாசருக்கு கொடுத்துள்ளார்.
இது குறித்து கணேஷன் கேட்ட போது, தம்பிக்கு பணத்தை கொடுத்ததாக கூறியுள்ளார். அதன் பின் அவர் இதைப் பற்றி விசாரிக்க, அப்போது காயத்ரிக்கும், யாசருக்கும் இருக்கும் பழக்கம் பற்றி தெரியவந்துள்ளது.
இதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், வீட்டை அடகு வைத்து எடுத்த லோன் பணத்திற்கு வட்டி கட்ட முடியாமல் காயத்ரி தவித்துள்ளார்.
அப்போது தான், கணவன் எடுத்துள்ள இன்சூரன்ஸ் பாலிசி காயத்ரியின் நினைவுக்கு வந்தது. கணவன் விபத்தில் இறந்தால் இன்சூரன்ஸ் பணத்தை வாங்கி கடனை அடைத்துவிடலாம். பின்னர் தனது யாசருடன் வாழலாம் என நினைத்துள்ளார்.
இதற்காக யாசருடன் சேர்ந்து பிளான் போட்ட அவர், போனில் அவருடன் பேசியுள்ளார். அதன் படி யாசரின் நண்பர்களான கருணாகரன், விஜயகுமார் ஆகியோரை காயத்ரி வீட்டுக்கு அனுப்பி கணேஷை கொலை செய்வது குறித்து ஒத்திகை பார்த்துள்ளார்.
காயத்ரி தூங்கும் இடம், கணேஷ் தூங்கும் இடங்களை பார்வையிட்டு திட்டமிட்டுள்ளனர். சம்பவத்தன்று கருணாகரன் மற்றும் விஜயகுமார் இரவு நேரத்தில் காயத்ரி வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த கணேசின் தலையில் கல் உடைக்கும் பெரிய சுத்தியாலால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
கட்டிலில் மெத்தை மற்றும் தலையணை இருந்ததால் தலையில் பலமாக அடி படவில்லை. ஆனால் கணேசின் மண்டை ஓடு உடைந்து ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. அவரது அடி வயிற்றுப்பகுதியிலும் சுத்தியலால் தாக்கியுள்ளனர்.
இதனால் முதலில் கட்டிலில் இருந்து விழுந்ததாக காயத்ரி நாடகமாடியுள்ளார், அதன் பின்னரே யாரோ இருவர் வந்து தாக்கிவிட்டதாக கூறியுள்ளார். இதைக் கண்டு உறவினர்கள் சந்தேகமடைந்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்க காய்த்ரி மாட்டிக் கொண்டார்.
இந்த வழக்கில் காயத்ரி, கருணாகரன், விஜயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் இருந்த யாசர் தலைமறைவாகிவிட்டதால் அவரை தொடர்ந்து தேடிவருவதாக பொலிசார் கூறியுள்ளனர்.




















