நல்லாட்சி அரசாங்கம் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை விற்பனை செய்ய முயன்றாலும் தற்போதைய அரசாங்கம் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடப்போவதில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் நட்டத்தை எதிர்நோக்கும் நிலையை மாற்றியமைப்பதே சமகால அரசாங்கத்தின் இலக்காகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



















