தங்களுக்கு வழங்கப்பட்ட அமைச்சரவை பதவிகளில் அதிருப்தி அடைந்ததாக கூறப்படும் அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் அமைச்சுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிங்கள ஊகடம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாசிறி ஜயசேகர, லோகன் ரத்வத்தே, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு ஜனாதிபதி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சின் புரிதலைக் கொடுக்கும் நோக்கத்துடன் செயல்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அந்த அமைச்சுகளால் பல ஆக்கபூர்வமான செயல்பாடுகளைச் செய்ய முடியும் எனவும்அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.


















