மக்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்வதோடு இந்த தேவைகளை மீண்டும் கேட்காத ஒரு நாட்டை உருவாக்குவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் தளத்தில் இதை பதிவிட்டு தனது உயர் எண்ணத்தை வெளியிட்டுள்ளார். அப்பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,
“கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக – நாடு முழுவதும் நான் பயணித்த போது – பல்வகையான சமூகங்களைச் சேர்ந்தவர்களையும் சந்தித்தேன்.
அவர்களில் பலருக்கு தேவையாக இருந்தது “நிரந்தர காணி, விவசாயத்திற்கு பொருத்தமான நிலம், நிரந்தர வீடு கட்ட வசதிகள், குழந்தைகளின் கல்விக்கான தேசிய பாடசாலைகள் மற்றும் குடிநீர் தேவை” என்பவையாகும்.
அவர்களின் இந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், இந்த தேவைகளை மீண்டும் கேட்காத ஒரு நாட்டை உருவாக்குவதற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.” என பதிவிட்டுள்ளார்.