நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில் அதன் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைவர் பதவியிலிருந்து விடை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்று தலைமைத்துவத்தைக் கைவிடுவதாக ரணில் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாகாண சபை தேர்தல் வரை கட்சியின் தலைவராக நீடிக்க ரணில் தீர்மானித்துள்ளார்.
இந்நிலையில், மாகாண சபை தேர்தல் அடுத்த ஆண்டு முதற் பகுதியில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், மாகாண சபைத் தேர்தலிலும் கட்சியின் தலைவராக ரணில் தான் தலைமை வகிப்பார் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அதன்படி, மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை பொருத்தமான ஒருவருக்கு ஒப்படைக்க ரணில் ஒப்புக் கொண்டுள்ளார்.