அமெரிக்காவில் இருந்து மனைவி, குழந்தைகளை பார்க்க இந்தியாவிற்கு வந்த கணவனை கொரோனா பீதி காரணமாக குடும்பத்தினர் வீட்டிற்குள் விடாமல் கெஞ்ச வைத்த சம்பவத்தின் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் பாஸ்கரன். இவருக்கும் கேரள மாநிலம் வெள்ளி மலை வாழ்வினை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், பாஸ்கரன் குடும்பத்தினரை கேரளாவில் விட்டு விட்டு, அமெரிக்காவிற்கு வேலைக்காக சென்றுவிட்டார்.

அங்கு பணியாற்றி வந்த நிலையில், சமீபத்தில் அவர் தன்னுடைய மனைவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கோ, குடும்பத்தினர் கொரோனா பீதி காரணமாக அவரை வீட்டிற்குள் விடாமல் பல மணி நேரம் கெஞ்ச வைத்தனர்.

அவர் மனைவியின் பெயரை அழைத்து என்னை உள்ளே விடு என்று கெஞ்சுகிறார். அதன் பின் சிலர் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும், மனைவி கணவனை வீட்டின் உள்ளே விடாததால், விரக்தியடைந்த பாஸ்கரன், கார் மூலம் மதுரைக்கு சென்றார்.
இந்த வீடியோ காட்சி இப்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.


















