புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட பலர் இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
ஸ்ரீலங்காவின் 18ஆவது விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நாமல் தனது கடமைகளை 18ஆம் திகதியே பொறுப்பேற்கப் போவதாக முன்னர் அறிவித்திருந்தார்.
அதன் பிரகாரம் கொழும்பு-7 இல் அமைந்துள்ள விளையாட்டு அமைச்சகத்தில் இன்றைய தினம் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக நாமல் ராஜபக்க்ஷ தனது கடமைகளை பொறுபேற்றுக் கொண்டுள்ளார்.
இதன்போது நாமல் ராஜபக்க்ஷ மத வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர் மதகுருக்களிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்
இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.























