இஸ்ரேலுக்கும் சூடானுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை விரைவில் ஏற்படுத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபு நாடுகளுடன் அமைதியை மேற்கொள்ள வரும் இஸ்ரேல் அரசுக்கு இது இரண்டாவது அரசாங்க ரீதியான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பதை தொடர்ந்து, தற்போது சூடானும் அத்தகைய அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த இஸ்ரேல் அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இஸ்ரேல் பிரதமர் அமைதிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உறுதியளித்துள்ளதாக சூடான் நாட்டின் வெளியுறவு துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அமைதி ஒப்பந்தங்கள் விவகாரத்தில் அமெரிக்காவும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.