சிறு குற்றங்களை இழைத்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 902 கைதிகளுக்கு ஜனாதிபதியின் அனுமதியுடன் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
பொது மன்னிப்பு வழங்குவதற்கு தகுதியுடையவர்களின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தல் மற்றும் சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியை குறைக்கும் நோக்கிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















