ஸ்ரீலங்காவின் 09 ஆவது நாடாளுமன்றின் எதிர்கட்சி தலைவராக, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் போது, சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சி தலைவராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அறிவித்துள்ளார்.
புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டனர்.
புதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தனவும் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும் அங்கஜன் இராமநாதன் குழுக்களின் பிரதி தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.



















