வவுனியா பறயனாலங்குளம் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீதித்தடைக்கு அருகாமையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் ஒன்று இன்று காலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வீதிக்கரையில் இருந்த சிறிய கொட்டில் ஒன்றில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலத்தை பறயனாலங்குளம் பொலிசார் அவதானித்ததுடன் சடலத்தினை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட நபரிடம் எந்தவித ஆவணங்களும் இல்லாத நிலையில் சடலத்தினை அடையாளம் காணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்ததுடன், அப்பகுதியை சேர்ந்த கிராமசேவகர்களை அழைத்து சடலத்தினை அடையாளம் காணுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த நபர் பேருந்தில் வருகைதந்து அப்பகுதியில் இறங்கியிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



















