பெங்களூருவை சேர்ந்த Pravaig Dynamics,எனும் நிறுவனம் தயாரித்துள்ள Extinction MK1
என்ற எலக்ட்ரிக் கார், அமெரிக்காவின் டெஸ்லா கார்களுக்கு இணையானதாக இருப்பதாக ஆட்டோமொபைல் துறையினர் புகழ்ந்து வருகின்றனர். இவர்கள் இப்படி கூறுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை என்பதே நிஜம்.. இக்காரின் சிறப்புகள் குறித்து அறிந்தால் பெட்ரோ, டீசல் கார்கள் இனி தேவையில்லை என்ற எண்ணம் உங்களுக்கும் நிச்சயம் மேலோங்கும்..
எதிர்காலம் என்பது எலக்ட்ரிக் வாகனங்களின் யுகமாக இருக்கப்போகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவில் தற்போது ஒவ்வொரு மாடலகாக களம் கண்டு வருகின்றது. பல முன்னணி நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாத, எரிபொருள் செலவில்லாத ஒரு வாகனத்தை சொந்தமாக்கவே சாமானியர் முதல் செல்வந்தர்கள் வரை விரும்புவர். செல்லும் தூரம், பேட்டரி சார்ஜ் ஆகும் நேரம் ஆகியவற்றை பொறுத்தே இவ்வகை வாகனங்களுக்கு மக்களிடம் வரவேற்பு அமையும்.
பெங்களூருவை சேர்ந்த Pravaig Dynamics நிறுவனத்தார் உருவாக்கியுள்ள Extinction MK1 எலக்ட்ரிக் காரை அமெரிக்காவின் டெஸ்லாவுடன் ஒப்பிடுகின்றனர். இந்தக் கார் வரும் தீபாவளியன்று அறிமுகமாகலாம் என்றும் அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகின்றன. இந்தக் காரின் சிறப்புகள் குறித்து தற்போது தெரிந்து கொள்வோம்.
தோற்றத்தில் கூட டெஸ்லாவின் மாடல்-3 காரை பிரதிபலிக்கிறது Extinction MK1 எலக்ட்ரிக் கார். இந்தக் காரின் ஸ்டைல் மிகவும் தனித்துவமாக உள்ளது. கவர்ந்திழுக்கும் வகையில் இதன் முகப்பு, ரியர், பாடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கார் முழுவதும் எல்.ஈ.டி விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முகப்பு மற்றும் ரியர் லைட்டுகள் இரண்டையும் இணைக்கும் வகையில் எல்.ஈ.டி விளக்கு ஃபிரேம், அலாய் வீல்களும் இடம்பெற்றுள்ளது.
504 கிமீ மைலேஜ்:
130 BHP பவரை வெளிப்படுத்தக்கூடிய தன்மை பெற்றுள்ள இக்கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 504 கிமீ பயணிக்கக்கூடியதாக இருப்பது இதன் சிறப்பு. இக்காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 196 கிமீ ( 121 மைல்) ஆக உள்ளது. 0-100 கிமீ வேகத்தை வெறும் 5.4 நொடிகளிக் இக்கார் எட்டிப்பிடித்துவிடுகிறது.
96 kWh li-ion battery pack இதில் இருக்கிறது. 500கிமீ லைலேஜ் என்பது தற்போதைய மின்சார வாகனங்களில் நிச்சயம் அதிகபட்ச திறனாகவே பார்க்கப்படுகிறது.
30 நிமிடங்களில் 80% சார்ஜ்:
30 நிமிடங்களில் இக்காரின் பேட்டரி 80% சார்ஜ் ஆகிவிடுவது புரட்சியாகவே கருதப்படுகிறது. இதன் மூலம் நெடுந்தூரப் பயணங்களுக்கும் இக்கார் ஏற்றது என்பதை நிரூபிக்கிறது.
தற்போதைக்கு இக்காரின் விலை, சிறப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இருப்பினும் 8 ஏர்பேக்குகள் சமீபத்திய தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாக இக்கார் வெளிவரும். முற்றிலும் ஒரு பாதுகாப்பான காராக இது அமையும் என்று இத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
முதலில் டெல்லி மற்றும் பெங்களூரு நகரங்களிலும் பின்னர் சென்னை, மும்பை, ஹைதராபாத் நகரங்களில் இக்கார் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்காருக்கு என பிரத்யேக டீலர்ஷிப்கள் இருக்காது. ஆன்லைன் தளத்தில் மட்டுமே இதனை வாங்க முடியும்.
டெஸ்லா போலவே ஒரு பிரத்யேக வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்க Pravaig Dynamics நிறுவனம் இதன் மூலம் முயற்சிக்கின்றது என்பதை அறிய முடிகிறது.



















