கள்ளக்குறிச்சியின் சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சர்மிளா.
இவருக்கும் அஸ்தம்பட்டியை சேர்ந்த முரளி என்பவருக்கும் காதல் மலர்ந்தது, கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் வேறு வேறு சாதி என்பதால் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையே ஊரடங்கை பயன்படுத்தி சர்மிளாவுக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர் அவரது பெற்றோர்.
இந்நிலையில் இ.பாஸ் தளர்வு அறிவிக்கபட்டதால் திருமணத்திற்காக தன் சம்பளத்தில் வாங்கி சேர்த்து வைத்திருந்த 50 சவரன் நகைகளை கை மற்றும் கழுத்தில் அணிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார் சர்மிளா.
இதை தொடர்ந்து அன்னதானப்பட்டியில் உள்ள கோயில் ஒன்றில் வைத்து முரளியும்- சர்மிளாவும் திருமணமும் செய்து கொண்டனர்.
அத்துடன் பாதுகாப்பு கேட்டு சேலம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மனுவும் அளித்துள்ளனர், இதுபற்றிய விசாரணை நடந்து வருகிறது.