ஜமைக்காவில் 32 வயது மனைவியை ஆட்களை வைத்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 65 வயது கோடீஸ்வர தொழிலதிபருக்கு 11 வருடங்களுக்கு முன்னர் இறந்த முதல் மனைவியின் மரணத்திலும் தொடர்பு இருக்கலாம் என நம்பமுடியாத அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
போர்லேண்டை சேர்ந்த தொழிலதிபர் எவர்டன் மெக்டொனால்டு (65). இவரின் இரண்டாவது மனைவி டோனியா ஹாமில்டன் (32).
டோனியா கடந்த மாதம் இறுதியில் அங்குள்ள காட்டு பகுதியில் காருக்குள் சடலமாக மீட்கப்பட்டார்.
காரானது தீயில் எரிந்து கொண்டிருந்த போதே பொலிசார் உள்ளிருந்த சடலத்தை மீட்டனர். இது தொடர்பான விசாரணையில் எவர்டன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதாவது எவர்டன் தனது மனைவியை சதித்திட்டம் போட்டு கொலை செய்திருக்கிறார்.
இதற்காக கூலிப்படை நபர்களுக்கு $3 மில்லியனுக்கும் அதிகமாக பணம் கொடுத்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையில் எவர்டனின் முதல் மனைவி கடந்த 2009ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
அவர் மரணத்திலும் எவர்டனுக்கு தொடர்பு இருக்கலாம் என பொலிசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் சில வருடங்களுக்கு முன்பு முதல் மனைவியின் இரண்டு உறவினர்களும் கொலை செய்யப்பட்டனர் என தெரியவந்துள்ளது.
இந்த பழைய வழக்குகளை பொலிசார் தூசிதட்டியுள்ள நிலையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.