ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னை இதுவரை 139 பேர் பாலியல் வன்கொடுமை செய்து இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அவருக்கு வயது 25. இந்த 25 ஆண்டுகளில் தன்னை 139 பேர் பாலியல் பலாத்காரம் செய்து இருப்பதாக அவர் ஹைதராபாத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் பெண் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடத்திற்குள் விவாகரத்து பெற்றார். இவர் அளித்துள்ள புகாரில் விவாகரத்து பெற்று இருக்கும் கணவருடைய குடும்பத்தில் சில உறுப்பினர்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு 42 பக்கங்களாக எப்ஐஆர் யார் போடப்பட்டுள்ளது. அந்தப் பெண் மருத்துவ பரிசோதனை செய்ய தற்போது அனுப்பப்பட்ட இருக்கின்றார். இதுகுறித்த குற்றவாளிகளை விசாரித்து வருகிறோம் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.