பிரித்தானியாவில் காணாமல் போன சிறுமி மேட்லின் மெக்கேனைப் போலவே, பிரான்சில் 17 ஆண்டுகளுக்கு முன் மாயமான பள்ளி மாணவியை தன் முன்னாள் கணவர்தான் கொலை செய்தார் என ஒரு பெண் சாட்சியமளித்துள்ளார்.
பிரித்தானிய சிறுமி மேட்லின் மெக்கேன் போர்ச்சுகல்லில் மாயமானதுபோலவே, பிரான்சில் Estelle Mouzin (9) என்ற பள்ளி மாணவி மாயமானாள்.
நீண்ட காலமாக அந்த மாணவியை பொலிசார் தேடி வந்த நிலையில், அந்த வழக்கில் இந்த சாட்சியத்தால் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
Estelle என்ன ஆனாள் என்றே தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அவளது உடலாவது கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
பிரெஞ்சு சீரியல் கில்லரான Michel Fourniret என்பவன்தான் Estelleயை கடத்தி, வன்புணர்ந்து, கழுத்தை நெறித்துக் கொலை செய்தான் என Fourniretஇன் முன்னாள் மனைவியான Monique Olivier சாட்சியமளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து Fourniret தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான். தற்போது Fourniret உதவியுடன் காணாமல் போன மாணவியின் உடலைத் தேடுவதற்கான ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது.
சீரியல் கில்லரான Fourniret, ஏழு சிறுமிகள் மற்றும் ஒரு இளம்பெண்ணைக் கொலை செய்ததாக 2008இல் சிறையில் அடைக்கப்பட்டாலும், Estelle குறித்து எதுவுமே சொல்லவில்லை.
இந்நிலையில், கொலை மற்றும் கடத்தலில் தொடர்பு இருந்ததற்காக 28 ஆண்டுகள் ஜாமீனில் வர இயலாத வகையில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் Olivierஇன் சாட்சியம், நீண்ட காலமாக மர்மமாகவே இருந்த ஒரு வழக்கின் மர்ம முடிச்சு அவிழ காரணமாகி உள்ளது.