உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 2,22,62,946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரசால் 7,84,107 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 1,42,50,202 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் பிரேசிலில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.
கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதிகட்டத்தை எட்டியுள்ள போதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, உலகமயமாதல், நெருக்கம் தொடர்பில்இருத்தல் போன்றவை நமக்கு குறைபாடுகளாக உள்ளது. ஆனால் நம்மிடம் தொழில்நுட்ப வளர்ச்சியில் நன்மை உள்ளது.
ஆகையால், கொரோனா தொற்றை நாம் இரண்டு ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம். தற்போது, இருக்கும் யூக்திகளை அதிகபட்சமாக பயன்படுத்த வேண்டும். அப்படி அதிகபட்சமாக பயன்படுத்தினால், கூடுதலாக கொரோனாவுக்கு தடுப்பூசி கிடைக்கும் என கூறினார்.