அமைச்சு பதவி ஒன்றை வழங்க முடியவில்லை என்றாலும் மாவட்ட இணைப்பு குழு தலைமை பதவியாவது வழங்குமாறு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் குறித்த எதிர்க்கட்சி முக்கியஸ்தர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உறுப்பினர் பல முறை அரசாங்கத்துடன் இணைவதற்காக அமைச்சு பதவி கேட்ட ஒருவராகும். எனினும் அவரது கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டமையினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த உறுப்பினர் கட்சி தலைவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அரசாங்கத்துடன் இணைவதற்கு தீவிர முயற்சி மேற்கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது.


















