ஸ்ரீலங்காவில் அண்மையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடை தொடர்பில் ஆராய மின்வலு அமைச்சினால் அமைக்கப்பட்ட 7 பேர் அடங்கிய குழுவின் அறிக்கை இன்று அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது.
அண்மையில் நுரைச்சோலை கீறீட் உப மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக நாடு முழுவதும் 5 மணித்தியாலங்களுக்கும் மேல் மின்சாரம் தடைப்பட்டது.
இதற்கான காரணத்தை கண்டறிய, மின்வலு அமைச்சர் எழுவர் கொண்ட குழுவை நியமித்தார்.
அதற்கமைய விசாரணைகளை நடத்திய அந்த குழு இன்று தமது ஆரம்பக்கட்ட அறிக்கையை அமைச்சரிடம் கையளிக்கவுள்ளது.
எவ்வாறாயினும் இது தொடர்பான இறுதி அறிக்கை இதுவரை தயாரிக்கப்படவில்லை என மின்வலு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன தெரிவித்தார்.
இதேவேளை மின்தடைக்கு மின்வலு அமைச்சே காரணம் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டால், தான் அந்த அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாக டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.