விளையாட்டுகளில் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்கும் விதமாக நவீன முறையில் புதிய சட்டம் காணப்பட வேண்டும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
ஊழல் எதிர்ப்பு மற்றும் இலஞ்சம் தொடர்பான ஏற்பாடுகள் புதிய விளையாட்டுச் சட்டத்தில் பெரிதும் இடம்பெறும்.
மேலும், இந்தச் சட்டத்தை வகுப்பது குறித்து ஆராய ஒரு குழுவை, தேசிய விளையாட்டு சபை நியமிக்கும்.
இந்த குழு, விளையாட்டு சபையினால் நியமிக்கப்படும். நாங்கள் அதை நீதி அமைச்சருடன் கலந்துரையாடுவோம். பொதுக்கருத்தும் கோரப்படும்.
அதாவது, சட்டத்தில் என்ன சேர்க்கப்படலாம் என்பது குறித்து பொதுக்கருத்துக்கள் சேகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.