வெலிகடை, மெகசின் சிறைச்சாலை மற்றும் கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக இன்று முதல் பொலிஸ் விசேட அதிரடிப் படையை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெரிய இதனை தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் அதனை கட்டுப்படுத்துவதற்காகவும் குறிப்பிட்ட சில சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் இவ்வாறு அதிரடிப்படையினரை களமிறக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.