சவுதி அரேபியாவில் பிரிந்து சென்ற மனைவி மீண்டும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவிக்காத நிலையில் மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவுதி அரேபியாவின் தெற்கு ஜெத்தாவைச் சேர்ந்தவர் 29 வயதான முனிரா. கடந்த இரு மாதங்களாக இவர் தமது மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தங்களது ஒரே ஒரு குழந்தையை கருத்தில் கொண்டு மீண்டும் சந்தித்து பேச வேண்டுமென மனைவியிடம் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு பிறகு முனிரா, மனைவியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர்கள் உரையாடல் வாக்குவாதமாக மாறியுள்ளது.
இதனால் கோபமடைந்த முனிரா மனைவியை சுவரோடு வைத்து மோதியுள்ளார். இதில் முனிராவின் மனைவி படுகாயம் அடைந்துள்ளார்.
அப்போதும் கோபம் அடங்காத கணவர் தன்னுடைய சுத்தியலால் மனைவியின் தலையில் தாக்கி அடித்தே கொலை செய்துள்ளார்.
பின்னர் இது குறித்து தன்னுடைய தாய்க்கு தகவலை தெரிவித்துள்ளார் முனிரா. அவர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் விவாதிக்க தங்களின் சமூக தலைவர்களை தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனால் அவர்கள் பொலிசாரை நாட வலியுறுத்தியுள்ளனர். மட்டுமின்றி முறைப்படி தகவலையும் தெரிவித்துள்ள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார், முனிராவையும், அவர் கொலைக்கு பயன்படுத்திய சுத்தியலையும் மீட்டனர்.
இது குறித்து தெரிவித்த உயிரிழந்த பெண்ணின் உறவினர் ஒருவர், அவர்களுக்குள் இருக்கும் பிரச்னையை பேசி சரிசெய்யவே தன் கணவரை சந்திக்க அவர் சென்றார்.
அவர்கள் பிரிவதற்கும் இரண்டு மாதத்திற்கு முன்னர் முனிரா தச்சர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.
ஒழுக்கமாக நடந்துகொள்ளவில்லை என அவரது நிர்வாகம் அவரை வேலையை விட்டு நீக்கியது என தெரிவித்துள்ளார்.