நடிகர் சூரி தற்போது வடிவேலு, சந்தானத்திற்கு பிறகு தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் சூரி நேற்று (27) தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இதையடுத்து நடிகர் சூரிக்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
400ருவா கேக்க கொடுத்துபுட்டு 4000ருவாய புடிங்கிருச்சுங்க நாபெத்த பிள்ளைங்க
இருந்தாலும் இந்த கேக்கிற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம்
தேங்க்யூ கட்டிபெத்தார்களா ❤️❤️❤️ pic.twitter.com/CqW6qcsY71
— Actor Soori (@sooriofficial) August 27, 2020
இந்த நிலையில் நடிகர் சூரியின் பிறந்தநாளை அவரது மகன் மற்றும் மகள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
கேக் செலவு – 1500, பெட்ரோல் கேக் – 500, டெக்கரேஷன் செலவு – 2000 மொத்தம் 4000 என்றும் மொத்த காச எடுத்து வெச்சிட்டு கேக்க வெட்டு என்று அந்த கேக்கின் மேல் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளனர்.
தனது பிள்ளைகளின் இந்த குறும்பு தனமான செயலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவு ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது.



















