லடாக் எல்லையில் படைகளை குறைக்க நடைவடிக்கை எடுக்குமாறு சீனாவுக்கு, இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்தியா – சீனாவுக்கு இடையில் இடம்பெற்று வரும் எல்லை பிரச்சினை குறித்து எவ்வித இணக்கப்பாடுகளும் எட்டப்படாத நிலையில், இராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பேச்சுவார்த்தைகளின்படி எல்லையில் படைகளை திரும்பப் பெற சீனா ஒப்புக்கொண்டது. இருப்பினும் சில பகுதிகளில் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்தே இந்தியா மேற்படி வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை கடந்த காலங்களில் ஏற்பட்ட மோதல்கள் யாவும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட்டதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதை மேற்கோள் காட்டிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாத்சவா கூறுகையில், சீனா எல்லையில் தன்னிச்சையாக தனது படைகளின் நிலையை மாற்றிக் கொள்ளக்கூடாது என்று ஜெய்சங்கர் வலியுறுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.