ராகுபகவான் சார்வரி வருடம் ஆவணி மாதம் 16ஆம் திகதியான 01.09.2020 செவ்வாய்க்கிழமை அன்று மிருகசீரிஷம் மூன்றாம் பாதமான மிதுன ராசியில் இருந்து மிருகசீரிஷம் இரண்டாம் பாதமான ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.
கேதுபகவான் சார்வரி வருடம் ஆவணி மாதம் 16ஆம் திகதியான 01.09.2020 செவ்வாய்க்கிழமை அன்று மூலம் முதல் பாதமான தனுசு ராசியில் இருந்து கேட்டை நான்காம் பாதமான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.
ராகுபகவான் சார்வரி வருடம் புரட்டாசி மாதம் 7ஆம் தேதியான 23.09.2020 புதன்கிழமை அன்று மிருகசீரிஷம் மூன்றாம் பாதமான மிதுன ராசியில் இருந்து மிருகசீரிஷம் இரண்டாம் பாதமான ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.
கேதுபகவான் சார்வரி வருடம் புரட்டாசி மாதம் 7ஆம் தேதியான 23.09.2020 புதன்கிழமை அன்று மூலம் முதல் பாதமான தனுசு ராசியில் இருந்து கேட்டை நான்காம் பாதமான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.
ஜீவனத்திற்கு மிகவும் அத்தியாவசியமான தேவைகளில் இன்றியமையாதது என்பது நாம் புரியும் தொழிலே ஆகும்.
நமக்கு ஏற்படும் மாற்றம் நம்மை மட்டும் சார்ந்து இல்லாமல் நமக்கு துணையாக இருக்கக்கூடியவர்களையும் மாற்றக்கூடியது என்பது நாம் புரியும் தொழிலே ஆகும்.
நாம் புரியும் தொழிலானது நம்முடைய அடையாளமாகவும், நமது வாழ்வாதாரத்தை உயர்த்தும் ஊன்றுகோலாகவும் விளங்குகின்றது.
கால நேரம் வரும்போது எல்லாம் கூடிவரும் என்பது படித்தவர் முதல் பாமரர் வரை சொல்லும் வழக்கு மொழியாகும். நாட்டில் எத்தனையோ பேர் தொழில் செய்கின்றனர். தொழில் அதிபர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் எல்லோரும் புகழ் பெற்ற தொழில் அதிபர்களாக ஆகமுடியாது.
வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு நம்மை அழைத்து செல்லும் தொழிலானது (வர்த்தகம்) வருகின்ற ராகு கேது பெயர்ச்சியில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்தை அளிக்கும்…
கடகம்
கன்னி
தனுசு
மீனம்
இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் வகையில் மாற்றமும், முன்னேற்றமும் உண்டாகும்.