நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் படுதோல்வியை தழுவிய ஐ.தே.க தற்போது தலைமைத்துவ சண்டையில் சின்னாபின்னமாகி சிதறவுள்ளது.
முன்னதாக கட்சியின் தலைமைத்துவ பதவியை கோரிய சஜித் பிரேமதாச அது சரிப்பட்டுவராது என தெரிந்த நிலையிலேயே கட்சியிலிருந்து வெளியேறினார்.
இதனையடுத்து நவீன் திஸநாயக்க கட்சித் தலைமையை ஏற்கத் தயாரென தெரிவித்து வந்தார்.
பின்னர் அமைதிாக இருந்த முன்னாள் சபாாகரும் ஐ தே க வின் சிரேஷ்ட உறுப்பினருமான கரு ஜயசூரிய கட்சித் தலைமைய ஏற்கத் தயார் என அறிவித்தார்.இவருக்கு கட்சியில் ஓரளவு செல்வாக்கு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தாம் தயாராகவுள்ளதாக மீண்டும் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நடந்து முடிந்த தேர்தலை கட்சியின் தோல்வியாக நோக்காது, அடுத்தகட்ட செயற்பாடுகளுக்கான சந்தர்ப்பமாகக் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தேவையான மறுசீரமைப்புகளை மேற்கொள்ள தற்போது சந்தர்ப்பம் எழுந்துள்ளதாக ருவன் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து, கட்சி ஆதரவாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் காலம் உருவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


















