கண்டி மாவட்டத்தில் ஹாரகம, மைலபிட்டி மற்றும் திகனா பகுதிகளில் நேற்று இரவு பூமியதிர்ச்சியை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள்தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் பீதியில் பதறியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக இலங்கை புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த சம்பவம் பூமியதிர்ச்சி இல்லை என்று புவியியல் ஆய்வின் சுனாமி ஆரம்ப எச்சரிக்கை மையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கண்டியில் உள்ள பல்லேகல பகுதியில் ஒரு நில அதிர்வு அளவீடு மட்டுமே சமிக்ஞையை பதிவு செய்துள்ளது.
இது இயற்கையான நிகழ்வு அல்ல, செயற்கையாகஏற்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
மற்ற நான்கு நில அதிர்வு அளவீடுகளில் பூகம்பம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது.
எனினும் வெளிவந்த சமிக்ஞை தொடர்பில் ஆய்வு செய்ய சிறப்பு அதிகாரிகள் குழு இன்று பல்லேகல பகுதிக்கு வருவதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.



















