உலகளாவிய ரீதியில் சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது. அந்த வகையில், இன்று காலை 10 மணிக்கு வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்திற்கு முன்னரும் யுத்தத்தின் போதும் பலர் கைது செய்யப்பட்டும், இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டும் காணமாலாக்கப்பட்டுள்ளனர் என தொடர்ச்சியாக குற்றம் சமத்தப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாது உலகின் பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டோர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, அவர்களை கண்டுப்பிடித்து தருமாறு வலியுறுத்தி தமிழர் தாயகமெங்கும் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்களாகியும் காணமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து தமது உறவுகள் தொடர்பாக நீதி வழங்கமாறு சர்வதேசத்திடம் வலியுறுத்தி இன்று வடக்கு, கிழக்கில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்தப் போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


















