நடிகை வனிதா விஜயகுமார் டுவிட்டர் மூலம் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புகார் தெரிவித்துள்ளார்.
பிரபல திரைப்பட நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான வனிதா, சமீபத்தில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான, விவாகரத்தாகாத ஒரு நபரை திருமணம் செய்ததாக சமூக வலைதளங்களில் வனிதா கடும் விமர்சனத்திற்குள்ளானார்.
ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் வனிதா தன்னுடைய வழக்கமான வேலைகளை செய்து வருகிறார். குறிப்பாக தன்னுடைய யூ டியூப் சேனலில், சமையல் விஷயங்கள் பலவற்றை பகிர்ந்து வருகிறார்.
அவருக்கு யூ டியூப் சேனில் ஏராளமான சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். 5 லட்சத்திற்கு மேற்பட்ட சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கின்றனர்.
இந்நிலையில், அவரது யூ டியூப் சேனலின் பெயரிலேயே போலியான கணக்கு ஒன்று இருப்பதாக ரசிகர்கள் அவருக்கு தெரியப்படுத்தினர்.
Ty …fraudulent channels must be taken up by @YouTubeIndia very seriously..they allow anyone to start or operate a channel…background and description is never checked..#Aadhaar must be asked with kyc completed.. @narendramodi @PMOIndia @CMOTamilNadu #cybersecurity #cybercrime https://t.co/dy9OEUckfd
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) August 29, 2020
இதனைப் பார்த்து பதறிய வனிதா, இதுபோன்று பிராடு சேனல்களை யூ டியூப் நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர்கள் யார் வேண்டுமானாலும் சேனல் தொடங்கலாம் ஆப்ரேட் செய்யலாம் என அனுமதிக்கிறார்கள். அவர்களின் பின்னணி குறித்தெல்லாம் செக் செய்வதில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் யூ டியூப் சேனல் தொடங்க வாடிக்கையாளர் குறித்த தகவலுடன் ஆதாரை கட்டாயமாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த பதிவை @narendramodi, @PMOIndia, @CMOTamilNadu ஆகிய கணக்குகளையும் சேர்த்துள்ளார்.




















