நடிகர் பிரித்திவி ராஜ் மற்றும் பிஜு மேனனின் நடிப்பில் வெளியான திரைப்படம் ஐயப்பனும் கோஷியும். இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில், மிகப்பெரிய ஹிட்டடித்தது. இந்த படத்தினை தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியிட தேவையான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் தமிழ் மொழியாக்கத்தில் பார்த்தீபன் நடிக்க வாய்ப்பு உள்ளது என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பார்த்தீபனுடன் சிம்புவும் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. மேலும், ஐயப்பனும் கோஷியும் படத்தில் சிம்பு – பார்த்தீபன் நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவியது.

இந்நிலையில், கார்த்தி மற்றும் பார்த்தீபன் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு பின்னர், கார்த்தியும் – பார்த்தீபனும் இப்படத்தின் மூலமாக மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த விஷயம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் என்னிடம் பேசவில்லை என்று பார்த்தீபன் விளக்கம் அளித்துள்ளார்.



















