அனுராதபுரம் பேருந்து நிலையத்தில் 2 வயது குழந்தையை நபர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதய நோய்க்காக சிகிச்சை பெறுவதற்காக சென்று திரும்பி வருவதற்கு பேருந்து இல்லாமையினால் பேருந்து நிலையத்தில் தனது தாய் மற்றும் தந்தையும் உறங்கிக் கொண்டிருந்த 2 வயதுடைய குழந்தை ஒன்றே துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பும் பேருந்து இல்லாமையால் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


















